ADDED : ஆக 25, 2024 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்:அன்னுார் தாலுகாவில், ஏழாவது முகாம், நாளை (27ம் தேதி) மேகிணறு அருகே கிராண்ட் பேலஸ் மண்டபத்தில், காலை 10:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை, நடக்கிறது. முகாமில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட, 17 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதில் ஒட்டர்பாளையம், பொகலூர், வடவள்ளி ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட தங்கள் கோரிக்கைகளை உரிய ஆவணங்களுடன் மனுக்களாக தரலாம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

