/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சூழ்ந்த மேக கூட்டம் சுற்றுலா பயணியர் 'குஷி'
/
சூழ்ந்த மேக கூட்டம் சுற்றுலா பயணியர் 'குஷி'
ADDED : மே 26, 2024 01:08 AM

ஊட்டி:மஞ்சூர் அருகே அணையை சூழ்ந்த மேக கூட்டங்களின் ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணியர் ரசித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், 4ம் தேதி முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்தது. சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழை ஓய்ந்தாலும் காலை, மாலை நேரங்களில் பள்ளத்தாக்கு பகுதிகளில் மேக மூட்டம் சூழ்ந்து வருகிறது.
மஞ்சூர் - கோவை சாலையில் கெத்தை மின் நிலையம், அதை ஒட்டி, 154 அடி உயரம் கொண்ட அணை உள்ளது. நேற்று பகல் நேரங்களில் மழை பொழிவு இல்லை என்றாலும், மேக மூட்டம் தென்பட்டதால் குளிரான கால நிலை நிலவுகிறது.
ஓணிக்கண்டி பகுதியிலிருந்து பள்ளத்தாக்கில் உள்ள கெத்தை மின்நிலையம், அணை பகுதிகளை மேக மூட்டம் சூழ்ந்து நீரோடை போல தென்பட்ட மேக கூட்டங்களின் ரம்மியமாக காட்சியை அவ்வழியாக வந்த சுற்றுலா பயணியர் போட்டோ, வீடியோ பதிவு செய்து மகிழ்ந்தனர்.