/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா வாகன விபத்து: போலீசார் விசாரணை
/
சுற்றுலா வாகன விபத்து: போலீசார் விசாரணை
ADDED : ஆக 20, 2024 10:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி :ஊட்டி அருகே தலைக்குந்தாவில் கேரளா சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த யாசர் அப்துல்லா அகமத்,51, துபாயில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். சமீபத்தில் வாங்கிய புதிய காரை எடுத்து கொண்டு மனைவி, இரு குழந்தைகளுடன் நேற்று காலை ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளார்.
காரை, யாசர் அப்துல்லா அகமத் ஓட்டி வந்துள்ளார். தலைக்குந்தா பகுதியில் வந்துகொண்டிருந்த போது, துாக்க கலக்கத்தில் சாலையோர மண் திட்டில் ஏறிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. புதுமந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

