/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மழை; விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
/
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மழை; விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மழை; விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மழை; விளையாடி மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
ADDED : மே 12, 2024 11:45 PM

ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும், சுற்றுலா பயணிகள் புல்வெளியில் விளையாடி மகிழ்ந்தனர்.
ஊட்டியில், கடந்த, 10ம் தேதி, 126 வது மலர் கண்காட்சி மற்றும் 19 வது ரோஜா கண்காட்சி துவங்கி, 20ம் தேதி வரை நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக, 270 ரகங்களில், 10 லட்சம் மலர்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று காலை சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. மேகமூட்டமான காலநிலையில், தாவரவியல் பூங்காவில் மலர்களால் உருவாக்கப்பட்ட 'டிஸ்னி வேர்ல்ட்' மற்றும் யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற 'பாரம்பரியமிக்க மலை ரயில்' அழகை கண்டு களித்தனர்.
நேற்று பிற்பகல், 2:30 மணியளவில் கனமழை பெய்தது. ஓயாத மழையிலும், சிறுவர், சிறுமியர் நனைந்தவாறு பந்து விளையாட்டில் ஈடுபட்டனர். பூங்காவில், விழா மேடை பந்தலில், ஏராளமான பயணிகள் ஒதுங்கியவாறு, இசை கச்சேரியை ரசித்தனர். பந்தலில் இடம் கிடைக்காத பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே மரத்தடியில் ஒதுங்கினர்.
மழை ஓய்ந்த நிலையில், மாலை, 4:00 மணிக்கு மேல், பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்து.