/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலர் கண்காட்சி நாளை நிறைவு: மழையிலும் ரசித்த சுற்றுலா பயணியர்
/
மலர் கண்காட்சி நாளை நிறைவு: மழையிலும் ரசித்த சுற்றுலா பயணியர்
மலர் கண்காட்சி நாளை நிறைவு: மழையிலும் ரசித்த சுற்றுலா பயணியர்
மலர் கண்காட்சி நாளை நிறைவு: மழையிலும் ரசித்த சுற்றுலா பயணியர்
UPDATED : மே 19, 2024 07:40 AM
ADDED : மே 18, 2024 11:39 PM

ஊட்டி:ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கொட்டும் மழையிலும் குடைப்பிடித்து கொண்டு மலர்களை ரசிக்க சுற்றுலா பயணிகள் வந்தனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடப்பாண்டு, 126வது மலர் கண்காட்சி, கடந்த, மே 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, பாரம்பரிய ஊட்டி மலை ரயில் என்ஜின் மற்றும் 'டிஸ்னி வேல்டு' பல லட்சம் மலர்களால் வடிவமைக்கப்பட்டது. பூங்கா வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகை, இத்தாலியன் கார்டன் மற்றும் பாத்திகளில், 10 லட்சம் மலர்கள் தயார்படுத்தினர்.
தவிர, பூங்கா மாடங்களில் மேரிகோல்டு, இன்கா மேரிகோல்டு என, 35 ஆயிரம் மலர் தொட்டி, 15 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ணங்களில் லில்லியம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டது. நேற்று, காலை முதல் ஊட்டியில் மழை பெய்தது.
சுற்றுலா பயணியர் வண்ண குடைகளை பிடித்து கொண்டு பூங்காவுக்கு வந்து மலர்களை ரசித்து சென்றனர். மலர் கண்காட்சி துவங்கி, 9 நாட்களில், 1.50 லட்சம் சுற்றுலா பயணிகள் பூங்காவுக்கு வந்து மலர்களை ரசித்து சென்றனர். நாளை, 20ம் தேதி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சி தாவரவியல் பூங்காவில் நடக்கிறது.

