/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் பூத்துள்ள செங்காந்தள் மலர்கள் ரசித்து செல்லும் சுற்றுலா பயணிகள்

ADDED : செப் 02, 2024 02:25 AM

கூடலுார்;கூடலுார், முதுமலை சாலை ஓரத்தில் பூத்து குலுங்கும் செங்காந்தள் மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
தமிழகத்தின் மாநில மலரான செங்காந்தள் மலர்கள், மருத்துவ பயன்களையும் கொண்டுள்ளது. சமவெளி பகுதிகளில், இதனை வணிக ரீதியாக சாகுபடி செய்து வருகின்றனர். நீலகிரி மாவட்ட வனங்களில் இவை இயற்கையாகவே காணப்படுகிறது.
கூடலுார் மற்றும் முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் பருவமழையை தொடர்ந்து, வனங்கள் மற்றும் சாலை ஓரங்களில் செங்காந்தள் மலர்கள் அதிகளவில் பூத்துள்ளன.
அதில், கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, முதுமலை சாலை ஓரங்களில் பூத்துள்ள மலர்களை, இவ்வழியாக பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் ரசித்து, 'போட்டோ' எடுத்து செல்கின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் இயற்கையாகவே செங்காந்தள் செடிகள் வளரக்கூடிய காலநிலை உள்ளது.
அரசு இதனை வணிக ரீதியாக உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்,' என்றனர்.