/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடைபாதைகளில் பாதிப்பு சுற்றுலா பயணிகள் தவிப்பு
/
நடைபாதைகளில் பாதிப்பு சுற்றுலா பயணிகள் தவிப்பு
ADDED : ஜூன் 24, 2024 12:05 AM
ஊட்டி;ஊட்டி நகராட்சி நடைப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பாதசாரிகள் அவதியடைந்துள்ளனர்.
ஊட்டியில் சீசன் முடிந்தாலும் வாரநாட்கள் உட்பட பிற நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை பகுதிகளில் உள்ள நடைப்பாதைகளில் பதிக்கப்பட்ட கற்கள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளன.
இதனால், உள்ளூர் மக்கள்; சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சில பகுதிகளில் நடைப்பாதை பணி துவக்கப்பட்டு நிறைவு பெறாமல் உள்ளது. அப்பகுதியில் வைக்கப்பட்ட கற்களை அகற்றாமல் காணப்படுகிறது. இதனால், பலரும் அப்பகுதிகளில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.