/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரவில் நகரை கடக்க ஒன்றரை மணி நேரம்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
/
இரவில் நகரை கடக்க ஒன்றரை மணி நேரம்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
இரவில் நகரை கடக்க ஒன்றரை மணி நேரம்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
இரவில் நகரை கடக்க ஒன்றரை மணி நேரம்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
ADDED : மே 02, 2024 11:41 PM
ஊட்டி:ஊட்டியில், 3 கி.மீ., சாலையை கடக்க ஒன்றரை மணி நேரம் ஆனதால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ஊட்டியில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.
நேற்று முன்தினம் இரவு பிங்கர்போஸ்ட், ஸ்பென்சர் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பிங்கர் போஸ்ட்டிலிருந்து ஸ்பென்ஷர் சாலையை கடந்து சேரிங்கிராஸ் செல்லஒன்றரை மணிநேரம் ஆனது.
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டபோது, அப்பகுதியில் போதிய போலீசார் பணியில் இல்லாததாலும் வாகனங்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. 3 கி.மீ., சாலையை கடந்து செல்ல ஒன்றரை மணி நேரம் ஆனதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி விரைவில் துவங்க இருப்பதால் போலீசார் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.