/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் நிலையத்தில் புகைப்படம் எடுக்க திடீர் தடை; சுற்றுலா பயணிகள் அதிருப்தி

ADDED : ஏப் 02, 2024 01:59 AM

குன்னுார்:பாரம்பரிய மிக்க மலை ரயில்வே ஸ்டேஷனில் புகைப்படம் எடுக்க திடீரென தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குன்னுார், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்தது.மலை ரயிலில் பயணம் செய்ய சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயில் முன்பும், ஸ்டேஷன் வளாகங்களிலும் புகைப்படம் எடுப்பதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், குன்னுார் மலை ரயில் ஸ்டேஷனில், தற்போது புகைப்படம் எடுக்கதடை விதித்து அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவனத் தலைவர் நடராஜன் கூறுகையில்,'' நுாற்றாண்டு கடந்தும் சிறப்பாக இயங்கி வரும் மலை ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் புகைப்படங்கள் எடுக்க சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
திடீரென, குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் புகைப்படம் எடுக்க தடை விதித்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
மலை ரயில் புதுப்பிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அதில் நடக்கும் முறைகேடுகளை புகைப்படம் எடுத்து வெளியான நிலையில் தற்போது திடீரென அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது,'' என்றார்.