/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணை அருகே அத்துமீறி 'செல்பி' மோகம் விபரீதத்தை உணராத சுற்றுலா பயணியர்

ADDED : மே 23, 2024 05:00 AM

ஊட்டி: ஊட்டி அருகே காமராஜர் சாகர் அணை அருகே அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகளால் உயிர்பலி அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊட்டி - கூடலுார் சாலையில் பைன் சோலை உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் வானுயர்ந்த பைன் மரங்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவர்ந்து வருகிறது. சீசன் மற்றும் பிற நாட்களில் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பைன் சோலைக்கு சென்று இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பைன்சோலையை ஒட்டி காமராஜர் சாகர் அணை உள்ளது. பைன்சோலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலியை தாண்டி அணை அருகே சென்று செல்பி மற்றும் போட்டோ எடுத்து வருகின்றனர்.
அத்துமீறலால் உயிர் பலி அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் உள்ள வனத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், '' சுற்றுலா பயணியர் சிலர் அத்துமீறி செல்வது குறித்து புகார் வந்துள்ளது. வனத்துறையினரின் கண்காணிப்பை மீறி சிலர் அணை அருகே செல்கின்றனர். கூடுதலாக வனத்துறை ஊழியர்களை பணியமர்த்தி தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.