/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழ கண்காட்சியை ரசித்த சுற்றுலா பயணிகள்: ரூ.18.50 லட்சம் தோட்டகலை துறைக்கு வருமானம்

ADDED : மே 28, 2024 12:13 AM
குன்னுார்;குன்னுார் பழ கண்காட்சிக்கு மூன்று நாட்களில், 19 ஆயிரத்து 953 பேர் வருகை தந்ததால், நுழைவு கட்டணமாக, 18.50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 64வது பழக்கண்காட்சி முதல் முறையாக மூன்று நாட்கள் நடத்தப்பட்டது. அதில், நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு, 100 ரூபாய், சிறியவர்களுக்கு, 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
கேமராக்களுக்கு, 500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. மூன்று நாட்களில், 'பெரியவர்கள், 17 ஆயிரத்து 19 பேர்; சிறியவர்கள் 2,934 பேர்,' என, மொத்தம், 19 ஆயிரத்து 953 பேர் வருகை தந்தனர்.
ஏராளமான உள்ளூர் மக்களும் கண்காட்சியை கண்டு ரசித்தனர். நுழைவு கட்டணமாக மொத்தம், 18.50 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.