/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊசிமலையில் ஆபத்தான பகுதி; அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
/
ஊசிமலையில் ஆபத்தான பகுதி; அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
ஊசிமலையில் ஆபத்தான பகுதி; அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
ஊசிமலையில் ஆபத்தான பகுதி; அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜூன் 03, 2024 12:36 AM

கூடலுார்;கூடலுார், ஊசிமலை காட்சி முனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்வதை தடுக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகள், கூடலுார் வழியாக அதிக அளவில் வருகின்றனர்.
இவர்கள், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது, கூடலுாரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் கற்பூர மரங்கள் நிறைந்த, ஊசிமலை பகுதியில் வாகனங்களை நிறுத்தி, காட்சி முனைக்கு சென்று, இயற்கை வளங்கள், மலை பள்ளத்தாக்கு பகுதியை ரசித்து வருகின்றனர்.
தற்போது, வனத்துறை சார்பில் பாறைகள் மீது மூன்று இடங்களில் நீலகிரி வரையாடு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதனை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்து செல்கின்றனர்.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், ஆபத்தை உணராது, உயரமான பாறையின் மீது, வைத்துள்ள, நீலகிரி வரையாடு சிலை அருகே நின்று 'போட்டோ' எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அப்பகுதிக்கு செல்பவர்கள் பாறையில் இருந்து விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே, வனத்துறையினர் கூடுதல் கண்காணிப்பு மேற்கொண்டு, ஆபத்தான பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.