/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய அரசு அறிவித்த பூங்கா அமைவிடத்தை மாற்ற கூடாது மாவட்ட கலெக்டரிடம் வியாபாரிகள் கோரிக்கை

ADDED : மார் 04, 2025 12:38 AM
கூடலுார், ; 'கூடலுாரில், மத்திய அரசு நிதி, 70 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள பூங்காவை, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலுார் நாடுகாணி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் ராஜேஷ், செயலாளர் சிவஞானம், பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு:
கூடலுார் பொன்னுார் பகுதியில் அரசு தோட்டக்கலை பண்ணை, 1975ல் துவங்கப்பட்டது. அப்போது, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது மிக குறைந்த அளவில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இப்பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க கூடிய எந்த தொழிற்சாலையும் இல்லை. படித்த இளைஞர்கள், பெண்கள் வேலையின்றி சமவெளி மற்றும் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில், பூங்கா அமைக்க மத்திய அரசு, 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இங்கு, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இத்திட்டத்தை வேறு பகுதியில் செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, அந்த இடத்தை மாற்றும் நடவடிக்கையை கைவிட்டு, வெளி மாநில பயணிகள் எளிதாக வந்து செல்லக்கூடிய, பொன்னுார் தோட்டக்கலை பண்ணையில் பூங்கா அமைக்க வேண்டும். இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.