ADDED : ஏப் 03, 2024 10:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார் : குன்னுார் சுற்றுப்புற பகுதிகளில் சாலையில் நடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குன்னுார் தொகுதியில் தி.மு.க., தேர்தல் பிரசார கூட்டம் சாலையில் வாகனங்களை நிறுத்தி நடத்தப்பட்டன. அதில், மக்களிடம் ஓட்டு கேட்டு, நீலகிரி தொகுதி வேட்பாளர் ராஜா உட்பட பலர் பேசினர். இதனால், சேலாஸ், அருவங்காடு பெட்டட்டி போன்ற பகுதிகளின், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் கூறுகையில்,' மக்களின் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் பிரசாரம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

