/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரவேனு பஜாரில் வாகன நெரிசல் கட்டுப்படுத்துவது அவசியம்
/
அரவேனு பஜாரில் வாகன நெரிசல் கட்டுப்படுத்துவது அவசியம்
அரவேனு பஜாரில் வாகன நெரிசல் கட்டுப்படுத்துவது அவசியம்
அரவேனு பஜாரில் வாகன நெரிசல் கட்டுப்படுத்துவது அவசியம்
ADDED : செப் 10, 2024 02:52 AM
கோத்தகிரி:'கோத்தகிரி அரவேனு பஜாரில், வாகன நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரவேனு பஜார் அமைந்துள்ளது. கோத்தகிரியில் இருந்தும், சுற்றுவட்டாரத்தில் உள்ள, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியூர் செல்லவேண்டும் எனில், அரவேனு பஜாரை கடந்து சென்றுவர வேண்டும்.
குறுகலான சாலையில் ஜக்கனாரை ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் தேசியமாக்கப்பட்ட வங்கி உட்பட, கடைகள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்துள்ளதால், நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதே போல், அரசு பஸ்கள், மினி பஸ்கள் உட்பட, தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. மக்கள் நடந்து செல்லும் போது விபத்து அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சீர்படுத்த போதிய போலீசார் இல்லை.
எனவே, நெரிசலை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

