ADDED : மார் 04, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையில், 5வது கொண்டை ஊசி வளைவில், சரக்கு ஏற்றி வந்த லாரி சிக்கி கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குன்னுார் -- மேட்டுப்பாளையம் மலை பாதையில் பகல், 12:30 மணியளவில், மேட்டுப்பாளைத்தில் இருந்து, குன்னுார் நோக்கி சரக்குகள் ஏற்றி வந்த லாரி, 5வது கொண்டை ஊசி வளைவில் திடீரென முன் பகுதியில் இரு டயர்களும் பஞ்சராகி நின்றன.
இதனால், வளைவு பகுதியில் கனரக வாகனங்கள் திருப்ப முடியாமல், இரு புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலின் பேரில், அங்கு சென்ற 'ஹைவே பேட்ரோல்' போலீசார், குன்னுார் போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். பெரும்பாலான பஸ்கள், லாரிகள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டன. மாலை,5:30 மணிக்கு போக்குவரத்து சீரானது.