ADDED : ஜூலை 03, 2026 08:02 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: அருவங்காடு– ஜெகதளா சாலையில் ஒரே நேரத்தில் மினி பஸ்கள் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குன்னுார் ஜெகதளா வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. சாலையோரத்திலும் ஏராளமான வாகனங்கள் நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.
சில நேரங்களில் இரு மினி பஸ்கள் ஒரே சமயத்தில் வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலையில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் நெரிசலில் சிக்கி குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, முறையின்றி நிறுத்தும் வாகனங்களை அகற்றவும், நெரிசலுக்கு தீர்வு காணவும் போலீசார் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
