/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் :அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
/
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் :அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் :அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் :அடிக்கடி போக்குவரத்து நெரிசல்
ADDED : மே 28, 2024 11:40 PM
ஊட்டி;ஊட்டி ரவுண்டானா பகுதி- ஏ.டி.சி., சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஊட்டி ஏ.டி.சி., பகுதியில் இருந்து கடநாடு, எப்பநாடு, அணிக்கொரை, தொரைஹட்டி, கெங்கமுடி, காவிலோரை உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பஸ் மற்றும் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
தவிர, இச்சாலையில் ஏராளமான தனியார் வாகனங்கள் செல்கிறது. இங்கு பகல் நேரங்களில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள 'பெட்ரோல் பங்க்' உள்ளதால், எரிபொருள் நிரப்ப வாகனங்கள் அணிவகுத்து நிற்பாலும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்படுகிறது. எனவே, இப்பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்க,போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.