/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பயிர் பாதுகாப்பு முறைகள் விவசாயிகளுக்கு பயிற்சி
/
பயிர் பாதுகாப்பு முறைகள் விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஆக 26, 2024 01:02 AM

கருமத்தம்பட்டி:பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பதுவம்பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, திருச்சியில் உள்ள, மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையம், சூலூர் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், பயிர் பாதுகாப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம் பதுவம்பள்ளியில் நடந்தது.
மத்திய ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மையத்தின் உதவி இயக்குனர் சிவ ராமகிருஷ்ணன் பேசுகையில்,காய்கறிகள் மற்றும் பழங்களில் பூச்சி கொல்லிகளின் எஞ்சிய நஞ்சுகள் அதிகளவில் உள்ளது. பல மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பயிர் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பூச்சி நோய் மேலாண்மை குறித்தும், விதை நேர்த்தி குறித்தும் முகாமில் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம், என்றார். பயிர் பாதுகாப்பு அலுவலர் பேராசிரியர் கோவிந்தராஜ், வயல் சூழல் ஆய்வின் முக்கியத்துவம், நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் குறித்தும் விளக்கினார்.
சூலூர் வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.