/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கக சான்றிதழ் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
/
அங்கக சான்றிதழ் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
அங்கக சான்றிதழ் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
அங்கக சான்றிதழ் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 16, 2024 01:26 AM
கோத்தகிரி;கோத்தகிரி கூக்கல்தொறை கிராமத்தில், தோட்டக்கலை -மலை பயிர்கள் துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் குமார் தலைமை வகித்தார். கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை துறை மூலம், அங்கக வேளாண்மை மேற்கொள்ள வழங்கப்படும் மானிய திட்டங்கள், சான்றிதழ் பெறுவது குறித்து விளக்கினார்.
துணை தோட்டக்கலை அலுவலர் சந்திரன், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக இடுப்பொருட்கள் ஜீவாமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி தயாரிப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மீன்வளத்துறை மேற்பார்வையாளர் ஜீவானந்தம் மீன்வளத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள், மற்றும் விவசாய பண்ணை குட்டைகளில் மீன் பிடிப்பு வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
ஊட்டி மண் ஆய்வுக்கு கூட வேளாண்மை அலுவலர் சாய்நாத், மண் ஆய்வின் முக்கியத்துவம் மற்றும் மண் மாதிரி சேகரிப்பு வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மாநில தோட்டக்கலை வளர்ச்சி இயக்கத்தில் கீழ் அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மண்வள அட்டை மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரவீணா வரவேற்றார். மணிமேகலா நன்றி கூறினார்.