/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி
/
கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி
கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி
கால்நடை தீவனம் வளர்ப்பு பழங்குடி பெண்களுக்கு பயிற்சி
ADDED : மே 07, 2024 11:27 PM
கூடலுார்:பொக்காபுரம் பழங்குடியின பெண்களுக்கு, கால்நடை பசுந்தீவனமான அசோலா வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மசினகுடி, பொக்காபுரம் பழங்குடியினர் மகளிர் குழுக்கள், கால்நடை வளர்ப்பு, கால்நடை பசுந்தீவனமான அசோலா வளர்ப்பு, ஜீவாமிர்தம் தயாரித்தல் குறித்து விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமுக்கு, 'ஆல் தி சில்ரன்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். முகாமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சுப்ரமணியம் துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து, 'கால்நடைகளின் கோமியம், சாணம் உள்ளிட்டவர்கள் கொண்டு விதை நேர்த்தி முறைக்கான ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை,' குறித்து நிர்மான் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் ஆல்வின் பிரபாகரன் விளக்கினார்.
கால்நடை உரங்களை தனியாக விற்பனை செய்ததற்கு மாற்றாக அவற்றை மேம்படுத்தி இயற்கை உரமாக மாற்றி விற்பனை செய்யவும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றவர்களுக்கு அசோலா விதைகள், முருங்கை மரம் வளர்ப்பு கிளைகள் வழங்கப்பட்டன.

