/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை விழா ஏற்பாடு உள்ளூரில் போக்குவரத்து மாற்றம்
/
கோடை விழா ஏற்பாடு உள்ளூரில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஏப் 28, 2024 09:08 PM
ஊட்டி:ஊட்டியில் கோடை விழா நடப்பதை முன்னிட்டு, உள்ளூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி போலீசார் எஸ்.பி., அலுவலக செய்தி குறிப்பு:
கூடலுாரில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர, அனைத்து சுற்றுலா வாகனங்கள் எச்.பி.எப்., கால்ப் கிளப் சாலையில் நிறுத்த வேண்டும். சுற்றுலா பயணிகள் அரசு சுற்று பஸ்களை பயன்படுத்த வேண்டும்.
மசினகுடியில் இருந்து, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு வரும் இலகு ரக வாகனங்கள், தலைகுந்தா, கோழிப்பண்ணை, புதுமந்து வழியாக, ஸ்டீபன் சர்ச் வந்தடைய வேண்டும். வண்டிசோலை வழியாக, தாவரவியல் பூங்கா செல்லலாம்.
கூடலுாரில் இருந்து, ஊட்டி படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா வரும் சுற்றுலா வாகனங்கள், பிங்கர் போஸ்டில் இருந்து, வலது புறம் திரும்பி, காந்தள் முக்கோணம் வழியாக, படகு இல்லம் மற்றும் கர்நாடகா பூங்கா சாலையை அடையலாம்.
குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு வரும் அரசு பஸ்கள் தவிர, அனைத்து சுற்றுலா வாகனங்கள் 'ஆவின்' பகுதியில் நிறுத்தி, அங்கிருந்து சுற்று பஸ்களில் சுற்றுலா பயணிகள் பயணிக்கலாம்.
கோத்தகிரியில் இருந்து, ஊட்டிக்கு வரும் அனைத்து வாகனங்களும், கட்டுப்பட்டு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, குன்னுார் வழியாக ஊட்டியை வந்தடையலாம்.
அத்தியாவசிய வாகனங்கள் தவிர, (பால், பெட்ரோலியம், சமையல் கேஸ்) அனைத்து கனரக வாகனங்களும், மே., 1 முதல், 31ம் தேதி வரை, காலை, 6:00 மணிமுதல் இரவு, 8:00 மணிவரை ஊட்டி நகருக்குள் அனுமதி இல்லை.
ஊட்டி மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் கமர்சியல் சாலையில் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள், கடைகளில் வேலை செய்யும் பணியாளர்கள், அவர்களது நான்கு சக்கர வாகனத்தை அவர்களது கடை எதிரே நிறுத்தக்கூடாது. அதற்கு பதிலாக, இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

