/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினர் வாழ்க்கை முறை ;பெங்களூரு மாணவர்கள் வியப்பு
/
பழங்குடியினர் வாழ்க்கை முறை ;பெங்களூரு மாணவர்கள் வியப்பு
பழங்குடியினர் வாழ்க்கை முறை ;பெங்களூரு மாணவர்கள் வியப்பு
பழங்குடியினர் வாழ்க்கை முறை ;பெங்களூரு மாணவர்கள் வியப்பு
ADDED : மார் 11, 2025 10:43 PM

ஊட்டி; நீலகிரி பழங்குடியினர் வாழ்க்கை முறை குறித்து அறிந்து கொள்ள பெங்களூரில் படிக்கும் மாணவர்கள், ஊட்டி நுாலகத்துக்கு வந்தனர்.
ஊட்டியில், மாவட்ட மைய நுாலகம் கடந்த, 72 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகத்தில், 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 1.75 லட்சம் நுால்கள் உள்ளன. 'தமிழ், ஆங்கிலம், மலையாளம் மற்றும் பிற மொழி,' என தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள், வெளியீடு என சுமார், 240 வெளியீடுகளும், போட்டி தேர்வுகளுக்கு தனியான புத்தகங்களும் உள்ளன. இதேபோல் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், சிறுவர்களுக்கு தனிப்பிரிவு உள்ளது.
இந்த நுாலகத்தில் சிறப்பு அம்சமாக பழங்குடியினர் பண்பாடு சார்ந்த தனி நுாலகம் உள்ளது. அதில், நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள், நீலகிரியில் உள்ள பழங்குடியின மக்களின் வரலாறு சார்ந்த ஆராய்ச்சி புத்தகங்கள் உள்ளன.
பழங்குடியினர்களின் வாழ்க்கை முறை
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள 'தேசிய பேஷன் டெக்னாலஜி' கல்வி மைய மாணவ, மாணவிகள், 30 பேர் நுாலகத்திற்கு வந்து, பழங்குடியினர் சம்பந்தப்பட்ட வரலாற்று நுால்களை படித்து குறிப்பெடுத்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட மைய நுாலகர் ரவி, பழங்குடியினர்களின் வரலாறுகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
பெங்களூரு மாணவர்கள் கூறுகையில்,'பழங்குடியின வாழ்க்கை முறைகள் குறித்து புத்தகங்களில் அதிக கருத்துக்கள் உள்ளது. இங்குள்ள புத்தகங்கள் மற்றும் தொகுப்புகள் மூலம் பழங்குடியினர் இடத்திற்கு நேரில் சென்றது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது. பழங்குடியினரின் மாறாத கலாசாரம் வியப்பளிக்கிறது, பழங்குடியினர் முன்னேற்றத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.