/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம சாலையை சீரமைக்க பழங்குடியின மக்கள் மனு
/
கிராம சாலையை சீரமைக்க பழங்குடியின மக்கள் மனு
ADDED : மார் 04, 2025 12:36 AM

கோத்தகிரி, ; 'கோத்தகிரி பங்களபடிகை இருளர் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்,' என, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தினர்.
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பங்கள படிகை, போங்கை மொக்கை, முடியூர், வக்கனமரம், பாவிக்கரை, சக்கப்படிகை, சாமைகொடல் மற்றும் கொக்கோடு உள்ளிட்ட கிராமங்களில், பழங்குடியின மக்கள் காலங்காலமாக வசித்து வருகின்றனர்.
அதில், பங்களபடிகை -கரிக்கையூர் இடையே, சாலை துண்டிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால், இப்பகுதி பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவும், ரேஷன் பொருட்கள் வாங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், கர்ப்பிணி பெண்கள் உட்பட, உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இப்பகுதியில், யானை, கரடி, சிறுத்தை உட்பட, வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ளதால், நீண்ட துாரம் நடந்து செல்ல முடியாத நிலையில் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், அரக்கோடு ஊராட்சி, குமரமுடி முதல் பங்களபடிகை வரை ஊராட்சி சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, இப்பகுதியை சேர்ந்த இருளர் மக்கள் சிவராஜ் தலைமையில், பொதுமக்கள் கலெக்டரிடம் நேற்று மனு அளித்தனர்.