/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உலக வெப்பமயமாதல் பாதிப்பால் சிக்கல்: ஊட்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய அமெரிக்க குழுவினர்

ADDED : செப் 11, 2024 06:54 AM

ஊட்டி : ஊட்டிக்கு வந்த அமெரிக்க குழுவினர், நகர வீதியில் ஆட்டோவில் வந்து, உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அமெரிக்காவை சேர்ந்த ஜோஸ் என்பவர் தலைமையிலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், 'ரிக் ஷா ரன் இந்தியா -தி அட்வென்சரிஸ்ட்ஸ்' அமைப்பை துவங்கினர்.
அதில், 210 பேர், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து, கேரளா மாநிலம் கொச்சி வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் ஆட்டோவில் பயணித்து வருகின்றனர்.
அதில், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வலியுறுத்தி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வரை ஆட்டோ ரிக் ஷாவில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, ஊட்டி கமர்ஷியல் சாலையில் நேற்று மாலை வந்த அவர்கள், மக்களிடையே புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது, குழு ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் கூறுகையில், ''கொச்சியில் இருந்து, 2,500 கி.மீ., துாரம் ஆட்டோவில் பல இடங்களுக்கும் பயணித்து, புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்பு; வன விலங்குகளை காப்பாற்றுதல்; பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல்; மரம் மற்றும் இயற்கையை வளங்களை காப்பாற்றி நம் வருங்கால சந்ததியினருக்கு விட்டு செல்ல வலியுறுத்தல், போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
மொத்தம், 70 ஆட்டோகளில், 210 நபர்கள் இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளோம்,'' என்றார்.