/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மனித கழிவுகளை கொட்டிய லாரி உரிமையாளருக்கு அபராதம்
/
மனித கழிவுகளை கொட்டிய லாரி உரிமையாளருக்கு அபராதம்
ADDED : ஜூன் 05, 2024 08:31 PM
பந்தலுார் : பந்தலுார் அருகே நீரோடை அருகே மனித கழிவுகள் கொட்டிய லாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 'செப்டிக் டாங்க் கிளீனிங் சர்வீஸ்' என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்கள், கடந்த, 3ம் தேதி கேரள கழிவுகளை பந்தலுார் சப்பந்தோடு நீரோடை அருகே கொட்டிய போது, கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் கை விரித்த நிலையில், வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அவர்களும் நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறிய நிலையில், சேரங்கோடு ஊராட்சி நிர்வாகத்திடம் லாரி ஒப்படைக்கப்பட்டது. ஊராட்சி மூலம், 50- ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் கழிவுகள் கொட்டியதை பொக்லைன் இயந்திரம் மூலம் மூடியதற்காக, 7,500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதனை லாரி உரிமையாளர் சக்கரவர்த்தி செலுத்திய நிலையில், 'இனி இது போன்ற செயலில் ஈடுபட மாட்டோம்,' என, லாரி உரிமையாளர் மற்றும் பணியாளர்களிடம் ஊராட்சி நிர்வாகம் பத்திரப்பதிவு தாளில் எழுத்து மூலம் உறுதிமொழி பெற்றனர்.
தொடர்ந்து, டாங்கர் லாரியை விடுவித்ததுடன், ஊட்டியில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை கொடுக்கவும் உத்தரவிட்டனர். இதனால், மூன்று நாட்கள் நிலவிய பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டது.