/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மண் சரிவில் சிக்கிய லாரி பழுது நீக்கப்பட்டு மீட்பு
/
மண் சரிவில் சிக்கிய லாரி பழுது நீக்கப்பட்டு மீட்பு
மண் சரிவில் சிக்கிய லாரி பழுது நீக்கப்பட்டு மீட்பு
மண் சரிவில் சிக்கிய லாரி பழுது நீக்கப்பட்டு மீட்பு
ADDED : ஜூலை 02, 2024 02:00 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே மண்சரிவில் சிக்கிய லாரி மீட்க்கப்பட்டது.
பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இரும்பு பாலம் பகுதியில் குடியிருப்புகள் மண் சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டன. நேற்று நெலக்கோட்டை மற்றும் சேரம்பாடி பாலவாடி வளைவு, சேரம்பாடி டான்டீ உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், தொண்டியாலம் என்ற இடத்தில் பழுதடைந்த நிலையில் சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, லாரி மீது மண்சரிவு ஏற்பட்டு லாரி சிக்கிக்கொண்டது. பின்னர் லாரியின் பழுது நீக்கி, மண்ணை அகற்றி அங்கிருந்து லாரி மீட்கப்பட்டது. நீர்மட்டம் பகுதியில் மேற்பட்ட மண் சரிவை நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் அகற்றி சீரமைத்தனர்.