/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை உரிய சிகிச்சை பெற்றால் பாதிப்பை தவிர்க்கலாம்
/
தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை உரிய சிகிச்சை பெற்றால் பாதிப்பை தவிர்க்கலாம்
தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை உரிய சிகிச்சை பெற்றால் பாதிப்பை தவிர்க்கலாம்
தொழிலாளர்களுக்கு காசநோய் பரிசோதனை உரிய சிகிச்சை பெற்றால் பாதிப்பை தவிர்க்கலாம்
ADDED : மே 16, 2024 06:18 AM

பந்தலுார் : பந்தலுார் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு, கூடலுார் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், 'ஆல் தி சில்ட்ரன்' இணைந்து நடத்திய காசநோய் பரிசோதனைக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார்.
'பாரி ஆக்ரோ' எஸ்டேட் மருத்துவமனை டாக்டர் ஷர்மிளா, மருந்தாளுனர் ரமேஷ், பராமரிப்பு பொறியாளர் வினோத் ஆகியோர் முகாமை துவக்கி வைத்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் பேசுகையில், ''காசநோய் காற்றின் மூலம் பரவும் தொற்று நோயாக உள்ளது.
நோயின் தாக்கம் இருந்தால் தொடர் சளி, இருமல், காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் இருக்கும். உரிய பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் காசநோய் பாதிப்பு மற்றும் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த இயலும்,'' என்றார்.
காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசுகையில், ''ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு காசநோய் தொற்று வேகமாக பரவும். 'எக்ஸ்ரே' மற்றும் சளி பரிசோதனை மூலம் நோயின் பாதிப்பை எளிதாக கண்டறிந்து, நோயின் தாக்கம் இருந்தால் தொடர் சிகிச்சை மேற்கொண்டு நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க இயலும். மேலும், மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் வழி ஏற்படுத்தும்,'' என்றார்.
தொடர்ந்து, 'பாரிஅக்ரோ' எஸ்டேட் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள், 60 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 'ஏகம் பவுண்டேசன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், தேயிலை தோல் உற்பத்தி அலுவலர் சைலேஸ், மருந்தாளுனர் இளவரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய துணை தலைவர் ராஜா நன்றி கூறினார்.