/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
/
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ADDED : மே 07, 2024 11:27 PM
கோத்தகிரி:ஊட்டி அருகே, தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
கடந்த, 1959ம் ஆண்டு முதல், 2004ம் ஆண்டு வரை பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாதன் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அன்னக்கிளி, தும்மனிட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, நாக்குபெட்டா நல சங்க தலைவர் பாபு மற்றும் கிராம தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
பள்ளி முன்னாள் மாணவரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான, வினோத்; ஊட்டி அரசு கலைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் ஈஸ்வரமூர்த்தி; தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியை அமுதவல்லி மற்றும் கனரா வங்கி மேலாளர் முகுந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் பேரவை தலைவராக சேகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல்வேறு பகுதிகளில் இருந்து, 6 முதல், 9ம் வகுப்பு வரை, 19 மாணவர்களுக்கான சேர்க்கை நடந்தது. முன்னாள் மாணவர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தில், 'பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்துவது; தொலை துாரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, வாகன வசதி ஏற்படுத்துவது,' என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். நிகழ்ச்சிகளை, பள்ளி ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை யசோதா தொகுத்து வழங்கினார். முடிவில், பட்டதாரி ஆசிரியர் பீமன் நன்றி கூறினார்.

