/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துார் வாரப்பட்ட 'செக்டேம்' விலங்குகளுக்கு பெரும் பயன்
/
துார் வாரப்பட்ட 'செக்டேம்' விலங்குகளுக்கு பெரும் பயன்
துார் வாரப்பட்ட 'செக்டேம்' விலங்குகளுக்கு பெரும் பயன்
துார் வாரப்பட்ட 'செக்டேம்' விலங்குகளுக்கு பெரும் பயன்
ADDED : ஜூலை 02, 2024 02:04 AM

கோத்தகிரி;கோத்தகிரி அருகே வன விலங்குகளுக்காக கட்டப்பட்ட 'செக்டேம்', 'தினமலர்' செய்தி எதிரொலியால் துார் வாரப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், வனப்பகுதியை ஒட்டி, வனவிலங்குகள் வறட்சி நாட்களில் தண்ணீர் பருக எதுவாக, வனத்துறை சார்பில் சிறு, சிறு 'செக்டேம்கள்' கட்டப்பட்டுள்ளன.
இதனால், வறட்சி நாட்களில் வன விலங்குகள் தண்ணீர் பருகி வந்ததுடன், உணவு மற்றும் தண்ணீருக்காக, அவை வெளியே வருவது தவிர்க்கப்பட்டு, விலங்கு-மனித மோதல் குறைந்திருந்தது.
இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி, பல செக்டேம்கள் துார்வாரப்படாமல், புல் மற்றும் காட்டு செடிகள் முளைத்து பயனில்லாமல் காணப்பட்டது. இதனால், வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு விலங்குகள் வரும் நிலை ஏற்பட்டது. 'இத்தகைய செக்டேம்களை துார்வார வேண்டும்,' என, கடந்த, 25ம் தேதி, 'தினமலர்' நாளிதழிலில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக, ஊட்டி- கோத்தகிரி சாலையில், புதுத்தோட்டம் பகுதியில் உள்ள 'செக்டேம்' துார்வாரப்பட்டதால் பெரும் பயன் ஏற்பட்டுள்ளது.