தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குடிபோதையில் தகராறு வாலிபரை கொன்ற இருவர் கைது

குடிபோதையில் தகராறு வாலிபரை கொன்ற இருவர் கைது

குடிபோதையில் தகராறு வாலிபரை கொன்ற இருவர் கைது


ADDED : மே 05, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 05, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பீமநாடு பகவதி அம்மன் கோவில் அருகே, மர்மமாக இளைஞர் இறந்த வழக்கில், அது கொலை என தெரியவந்ததால், இருவரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பீமநாடு மேற்குக்கரை பகுதியை சேர்ந்த சங்கரன், 36, என்பவர், கடந்த ஏப்., 16ம் தேதி, பீமநாடு வெள்ளிலக்குன்னு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த நாட்டுகல் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையில் பலத்த காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், தடயவியல் நிபுணர்கள் ஆய்வில் இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரியவந்தது. தொடர் விசாரணையில், சங்கரனை கொலை செய்த அப்பகுதியை சேர்ந்த அப்துல் ஜலீல், 28, முகமது ஜவ்ஹர், 31, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

விசாரணையில், அப்துல் ஜலீல் மற்றும் முகமது ஜவ்ஹர் இருவரும் சங்கரனுடன் சேர்ந்து, சம்பவத்தன்று மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. இருவரும் சங்கரனை தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார். அவரைத் தூக்கி தோட்டத்தின் சுற்றுச்சுவர் மீது ஏற்றி மறுபக்கம் தள்ளிவிட்டுள்ளனர். இதில், சங்கரன் இறந்து விட்டார். கொலையை மறைக்க, சங்கரனின் வேட்டியால் அவரது முகத்தை மூடிவிட்டு இருவரும் தப்பியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us