/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா விற்பனை இருவர் கைது; கார் பறிமுதல்
/
கஞ்சா விற்பனை இருவர் கைது; கார் பறிமுதல்
ADDED : ஆக 01, 2024 12:24 AM

குன்னுார் : குன்னுார் கோத்தகிரி பகுதிகளில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவர் சைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த எஸ்.பி. சுந்தர வடிவேலு உத்தரவின் பேரில் தனிப்படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்னுார், கோத்தகிரி பகுதிகளில் டி.எஸ்.பி.,குமார் தலைமையிலான தனிப்படையினர் கண்காணித்து சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குன்னுார் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடி வந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அவர் உமரி காட்டேஜ் பகுதியை சேர்ந்த ரோஷன், 22, என்பதும், இவருடன் கோத்தகிரி காம்பாய் கடை வீதியை சேர்ந்த மகேஷ்,23, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இவர்களிடம் இருந்து, 250 கிராம் கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குன்னுார் கிளை சிறையில் அடைத்தனர்.