/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காலி சிகரெட் பாக்கெட்டுக்குள் புகையிலை மறைத்து விற்பனை செய்த இருவர் கைது

ADDED : ஆக 06, 2024 09:45 PM
கூடலுார் : கூடலுாரில் காலி சிகரெட் பாக்கெட்டுக்குள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்த தம்பதியினரை போலீசார் கைது செய்தனர்.
கூடலுார் நகரின் மைய பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, எஸ்.எஸ்.ஐ., இப்ராஹீம் மற்றும் போலீசார், சாதாரண உடையில் சென்று தருமன், 70, என்பவரின் கடையில் சோதனை செய்தனர்.
சோதனையில், 15 காலி சிகரெட் பாக்கெட்டுக்குள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து, ஆனசெத்தகொல்லி பகுதியில் இவருக்கு சொந்தமான கடையிலும், போலீசார், சோதனை செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பெருட்களை, பறிமுதல் செய்தனர். கடையில் இருந்த தருமன் மனைவி செல்வக்கனி, 51, என்பவரையும் கைது செய்தனர்.