/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இருவர் கைது
/
அரசு பஸ்சில் கஞ்சா கடத்திய இருவர் கைது
ADDED : ஜூலை 03, 2024 09:13 PM

கூடலுார் : கர்நாடக அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த இருவரை, கூடலுார்போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, கர்நாடக அரசு பஸ்சில், கூடலுாருக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. கூடலுார் எஸ்.எஸ்.ஐ., பவுலோஸ், போலீசார் அன்பு, சசி ஆகியோர் நேற்று காலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மைசூரிலிருந்து வந்த கர்நாடக அரசு பஸ்சை சோதனை செய்தனர். அதில், ஏற்கனவே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட, கூடலுாரை சேர்ந்த முகமது ரியாஸ், 22, நிசார் அகமது,21, ஆகியோர் இருந்தனர். சந்தேகமடைந்த, போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்ததில், கர்நாடகாவில் இருந்து விற்பனைக்காக, 30 பாக்கெட்டுகளில், 124 கிராம் கஞ்சாவை கடத்தி வருவது தெரியவந்தது. அவர்களை கூடலுார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். எஸ்.ஐ., கபில்தேவ் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தார். கைது செய்யப்பட்ட முகமது ரியாஸ் மீது இரண்டு வழக்குகள்; நிசார் அகமது மீது, 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.