/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புலி தாக்கி இரண்டு மாடுகள் பலி?: அச்சத்தில் மக்கள்
/
புலி தாக்கி இரண்டு மாடுகள் பலி?: அச்சத்தில் மக்கள்
புலி தாக்கி இரண்டு மாடுகள் பலி?: அச்சத்தில் மக்கள்
புலி தாக்கி இரண்டு மாடுகள் பலி?: அச்சத்தில் மக்கள்
ADDED : மார் 06, 2025 09:37 PM
கூடலுார்; மேல் கூடலுார் அருகே, தனியார் எஸ்டேட் பகுதியில், மெய்ச்சலுக்கு விடப்பட்ட, இரண்டு பசு மாடுகள் புலி தாக்கி இறந்ததாக கூறப்படுவதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மேல் கூடலுார், ஓ.வி.எச்., சாலையில் வசித்து வரும் சங்கீதா, இரு தினங்களுக்கு முன், தனது இரண்டு பசுமாட்டை, அருகே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை பசுக்களை காணவில்லை.
நேற்று முன்தினம், காலை தேடிய போது, எஸ்டேட்டை ஒட்டிய நீரோடை பகுதியில், காயங்களுடன் ஒரு மாடு இறந்து கிடந்தது. மற்றொன்று உயிருக்கு போராடியது. சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தது. புலி தாக்கி இரண்டு மாடுகள் இருந்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர், 'மாமிச உண்ணி தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ளது. அதன் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்படும். அப்பகுதியில், கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும்,' என, கூறினர்.
மக்கள் கூறுகையில், 'புலி தாக்கி இரண்டு மாடுகள் இறந்துள்ளன. இதனால் அச்சத்துடன் வசித்து வருகிறோம். வனத்துறையினர் சிறுத்தை தாக்கியும் மாடுகள் இறந்து இருக்கலாம் என தெரிவித்தனர். இப்பகுதியில் ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டும்,' என்றனர்.