/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டத்தில் முகாமிட்ட இரு யானைகள்: வாழை மரங்கள் சேதம்; விரட்டிய வனத்துறையினர்

ADDED : செப் 11, 2024 10:16 PM

கூடலுார் : கூடலுார் அருகே விவசாய தோட்டத்தில் முகாமிட்ட இரண்டு காட்டு யானைகளை, விவசாயிகள் உதவியுடன் வன ஊழியர்கள் விரட்டினர்.
கூடலுார், தொரப்பள்ளி, குணில், தேன்வயல் பகுதிகளில் இரண்டு மாதமாக, இரண்டு காட்டு யானைகள் இரவில் விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பொதுமக்களும், வனத்துறையினர் அவைகளை விரட்டினாலும், அப்பகுதிக்குள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியவில்லை.
இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதுடன், இரவில் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு இப்பகுதிக்கு நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்திய யானைகள், நேற்று, காலை அப்பகுதியில் முகாமிட்டன. அச்சமடைந்த மக்கள் அதனை விரட்டினர்; ஆனால் அங்கிருந்து செல்லவில்லை. தகவல் அறிந்து வந்த வன ஊழியர்கள், விவசாயிகள் உதவியுடன், காலை, 9:30 மணிக்கு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர்.
மக்கள் கூறுகையில், 'இந்த இரண்டு யானைகள் நாள்தோறும் இரவில் கிராமத்துக்குள் வந்து, விவசாய பயிர்களை சேதப்படுத்தி, தொடர்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதுடன் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தொடரும் இப்பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்படும்,' என்றனர்.