/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலக்காடு நகைக்கடையில் திருட்டு; தமிழக பெண்கள் இருவர் கைது
/
பாலக்காடு நகைக்கடையில் திருட்டு; தமிழக பெண்கள் இருவர் கைது
பாலக்காடு நகைக்கடையில் திருட்டு; தமிழக பெண்கள் இருவர் கைது
பாலக்காடு நகைக்கடையில் திருட்டு; தமிழக பெண்கள் இருவர் கைது
ADDED : ஜூலை 16, 2024 01:23 AM

பாலக்காடு;பாலக்காடு நகரில், நகை வாங்குவது போல் நடித்து, நகைக் கடையிலிருந்து ஊழியர்களை ஏமாற்றி இரண்டு பவுன் நகையை திருடிய தமிழகத்தை சேர்ந்த இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு ஜி.பி., ரோட்டில் செயல்படுகிறது போபி செம்மண்ணூர் நகைக்கடை. இங்கு, கடந்த 8ம் தேதி மாலை நகை வாங்குபவர்கள் போன்று இரு பெண்கள் ஊழியர்களை ஏமாற்றி, 2 பவுன் கம்மலை திருடி சென்றனர்.
இதை அறிந்த ஊழியர்கள், பாலக்காடு டவுன் மேற்கு போலீசாரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து எஸ்.ஐ., ராஜேஷின் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், தமிழ்நாடு, கிருஷ்ணகிரியை சேர்ந்த கிருஷ்ணவேணி, 57, திருப்பத்துாரை சேர்ந்த செல்வி, 51, ஆகியோர் என்பது தெரிந்தது. தொடர்ந்து அவர்களை நேற்று கோவையில் வைத்து கைது செய்தனர்.
எஸ்.ஐ., ராஜேஷ் கூறுகையில், ''தமிழகத்தை மையமாக கொண்டு விசாரித்த போது, கடந்த மே மாதம் கோவையில் உள்ள நகை கடையில் திருட்டு நடந்து உள்ளதும், வழக்கில் கைதாகி சிறையில் இருந்த கிருஷ்ணவேணி, செல்வி இருவரும், ஜாமினில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
அவர்கள், பாலக்காட்டில் நகைக்கடையில் திருட்டு ஈடுபட்டது உறுதியானது. தமிழகத்தில் மட்டும் அவர்கள் மீது, 12 திருட்டு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்,'' என்றார்.