/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு
/
'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு
'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு
'ஹெல்மெட்' அணிவதன் அவசியம் இரு சக்கர வாகன விழிப்புணர்வு
ADDED : ஆக 12, 2024 02:26 AM

ஊட்டி;ஊட்டியில் 'ஹெல்மெட்' அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, 130 கி.மீ., துாரம் இருசக்கர வாகன பேரணி நடந்தது.
கோவை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில், இருசக்கர வாகனங்கள் வைத்திருப்போர் குழுவாக போலீசாருடன் இணைந்து, ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து, பல்வேறு மாநிலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக வந்த குழுவினர் ஊட்டியில் ஒருங்கிணைந்தனர். ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில், டி.எஸ்.பி., யசோதா பேரணியை துவக்கி வைத்தார்.
பேரணியானது, நகரில் முக்கிய வீதிகள், நடுவட்டம், கூடலுார், முதுமலை, மசினகுடி, கல்லட்டி மற்றும் தலைகுந்தா வழியாக, 130 கி.மீ., தொலைவில் ஊட்டியை வந்தடைந்தது.
பைக் ரைடர் மோனிஷ் கூறுகையில், ''ஹெல்மெட் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதால், விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, இருசக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும்,'' என்றார்.