/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
/
இலவச ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
இலவச ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
இலவச ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ADDED : ஏப் 24, 2024 10:05 PM
அன்னுார் : தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டில் சேர்வதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கின்றனர்.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதில் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
அவர்களுக்கான கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு பதில் அரசே அந்த பள்ளிகளுக்கு நேரடியாக வழங்கும். இந்தத் திட்டத்தில் கடந்த 22ம் தேதி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது பள்ளிகளை தேர்வு செய்வதற்கான பகுதியில் எந்த பள்ளியின் பெயரும் இடம் பெறவில்லை. இதனால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இந்தத் திட்டத்தில் சேர்க்க விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஒட்டர் பாளையம் பகுதி பெற்றோர் கூறுகையில், 'இரண்டு நாட்களாக தனியார் பிரவுசிங் சென்டர் மற்றும் இ-சேவை மையங்களில் பதிவு செய்ய முயற்சித்து வருகிறோம்.
ஆனால் பள்ளிகளின் பட்டியல் இடம்பெறவில்லை,' என்றனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விண்ணப்பதாரர் வசிக்கும் இடத்திலே ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் அரசு துவக்கப்பள்ளி இல்லாமல் இருக்க வேண்டும்.
அங்கு தனியார் நர்சரி, மெட்ரிக் அல்லது சி.பி.எஸ்.இ., பள்ளி இருந்தால் அங்கு அவர்கள் இலவச திட்டத்தின் கீழ் சேரலாம். எனவே விண்ணப்பிக்கும் போதே அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு கி.மீ., சுற்றளவுக்குள் அரசு துவக்கப்பள்ளி இருந்தால். அவர்கள் விண்ணப்பிக்கும் போது அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பட்டியலை இணையதளம் காண்பிக்காது.
இந்த ஆண்டு இந்த நடைமுறை புதிதாக அமலுக்கு வந்துள்ளது,' என்றனர்.

