/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரத்தான் ஓட்டத்தில் அசத்திய இளைஞர்கள்
/
மாரத்தான் ஓட்டத்தில் அசத்திய இளைஞர்கள்
ADDED : ஜூலை 03, 2024 02:25 AM
அன்னுார்;அன்னுாரில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில், 800க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்திய மருத்துவக் கழகத்தின், அன்னுார் கிளை சார்பில், 10 கி.மீ., மற்றும் 21 கி.மீ., மாரத்தான் ஓட்டம், ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும், அன்னுார் அம்பாள் துளசி பப்ளிக் பள்ளியில் நேற்று நடந்தது. போட்டியை மருத்துவக் கழக கிளை தலைவர் டாக்டர் சதீஷ் பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில், அன்னூர், கோவை, அவிநாசி, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து 200 பெண்கள் உட்பட சிறுவர், சிறுமியர், ஆண்கள் என 800 பேர் பங்கேற்றனர். இரு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தோர்க்கு, ரொக்க பரிசு, கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பங்கேற்ற அனைவருக்கும், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பரிசுகளை, அம்பாள் துளசி பப்ளிக் பள்ளி தாளாளர் நந்தகுமார், மருத்துவக் கழகத்தின் மாநில தலைவர் அப்துல் ஹசன், இன்ஸ்பெக்டர் நித்யா ஆகியோர் வழங்கினர்.