பராமரிப்பு இல்லாத 'டேவிஸ் பூங்கா' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
பராமரிப்பு இல்லாத 'டேவிஸ் பூங்கா' சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 19, 2024 01:38 AM

ஊட்டி;ஊட்டி டேவிஸ் பூங்கா பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகம் அருகே டேவிஸ் பூங்கா, சாலை ஓரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்காவை, சுற்றுலா பயணிகள் குறிப்பாக, சிறுவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
இப்பூங்கா, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.
இங்குள்ள நீரூற்று, தண்ணீர் இல்லாமல் பராமரிப்பின்றி வெறுமனே விடப்பட்டுள்ளது. புல்தரை வளர்ந்து, சிறுவர்கள் விளையாட முடியாத நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து செல்கின்றனர்.
கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில், லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவதால், இப்பூங்காவை சீரமைத்து பொலிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதே போல, மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் உள்ள சிறிய பூங்காக்களையும் சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
