/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பராமரிப்பு இல்லாத ஊட்டி- - பெங்களூரூ பஸ் பயணிகள் அதிருப்தி
/
பராமரிப்பு இல்லாத ஊட்டி- - பெங்களூரூ பஸ் பயணிகள் அதிருப்தி
பராமரிப்பு இல்லாத ஊட்டி- - பெங்களூரூ பஸ் பயணிகள் அதிருப்தி
பராமரிப்பு இல்லாத ஊட்டி- - பெங்களூரூ பஸ் பயணிகள் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2024 12:50 AM
ஊட்டி;ஊட்டி- பெங்களூர் வழித்தட பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
ஊட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் இரவு, 8:30 மணி, மற்றும் 10:00 மணிக்கு இரண்டு அரசு பஸ்கள் பெங்களூருக்கு இயக்கப்படுகிறது. ஊட்டி உட்பட சுற்று வட்டார கிராம மக்கள் பெங்களூருக்கு செல்ல இந்த பஸ்சை அதிகமாக பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சாதாரண கட்டணத்தில் இந்த இரண்டு பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த வழித்தடத்திற்கு ஆரம்பத்தில இரண்டு புதிய பஸ்கள் இயக்கப்பட்டது. ஊட்டியில் கோடை சீசனை ஒட்டி இந்த இரண்டு பஸ்களை 'சுற்று பேருந்துக்கு' பயன்படுத்தப்பட்ட நிலையில், பழைய பேருந்துகள் பெங்களூரு வழிதடத்திற்கு இயக்கப்பட்டது.
இந்த பேருந்துகளில் போதிய பராமரிப்பு இல்லாத நிலை உள்ளது. பராமரிப்பு இல்லாத பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
பொது மேலாளர் கணபதி கூறுகையில், ''பெங்களூர் வழித்தட பஸ்கள் குறித்து புகார் வந்தது. நல்ல நிலையில் உள்ள பஸ்களை இயக்க உத்தர விட்டுள்ளேன்,'' என்றார்