/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அகற்றப்படாத மரம்: தொடரும் விபத்து
/
அகற்றப்படாத மரம்: தொடரும் விபத்து
ADDED : ஆக 26, 2024 02:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்;குன்னுாரில் இருந்து உபதலை சோகத்தொரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக கரடிப்பள்ளம் சாலை உள்ளது.
சமீபத்தில் பெய்த கன மழையில், இங்கு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மரம் வெட்டி அகற்றப்பட்ட நிலையில், வேரோடு சாய்ந்த பகுதியுடன், மரத்துண்டுகள் அதே இடத்தில் அகற்றப்படாமல் உள்ளன.
இதனால், வளைவு பகுதியில் அகலம் குறைந்த இந்த சாலையில் வாகனங்கள் வரும் போது விபத்துக்கு உள்ளாகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள் விபத்து ஏற்பட்டு சிலருக்கு காயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, பெரிய விபத்துகள் நடக்கும் முன்பு இந்த மரங்களின் வெட்டப்பட்ட பாகங்களை முழுமையாக அகற்ற வேண்டும்.

