நியாயமான ஆட்டோ கட்டண முறையை அமல்படுத்த வலியுறுத்தல்
நியாயமான ஆட்டோ கட்டண முறையை அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 10, 2026 05:11 PM
ஊட்டி: கூடலுார் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
எரிபொருள் விலை, வாகன பராமரிப்பு செலவு, காப்பீடு, வரிகள், ஓட்டுனரின் நியாயமா வருமானம் அடிப்படையில், ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.
மேலும், அனைத்து ஆட்டோக்களிலும், டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளை கட்டாயமாக பொருத்த வேண்டும். மாநிலம் முழுவதும் செயல்படும் ஒருங்கிணைந்த மொபைல் செயலி மற்றும் இணையதளத்தின் வாயிலாக, ஆட்டோ முன்பதிவு, மீட்டர் கட்டண கணக்கீடு, போன்ற வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், நீதிமன்ற வளாகங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பொது இடங்களில் அரசு நிர்ணயத்த கட்டண அட்டவணையை காட்சி படுத்த வேண்டும். பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இலவச உதவி எண், எளிய வழி புகார் பதிவு முறையுடன், மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு, அதில்,கூறப்பட்டுள்ளது.
