/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசின் போட்டி தேர்வு எழுத அறிவுசார் மையத்தால் பயன்
/
அரசின் போட்டி தேர்வு எழுத அறிவுசார் மையத்தால் பயன்
அரசின் போட்டி தேர்வு எழுத அறிவுசார் மையத்தால் பயன்
அரசின் போட்டி தேர்வு எழுத அறிவுசார் மையத்தால் பயன்
ADDED : ஜூலை 01, 2024 02:25 AM
ஊட்டி;ஊட்டியில் உள்ள அறிவுசார் மையத்தை பயன்படுத்தி, அரசு போட்டி தேர்வுகளை எழுத மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி நகராட்சி காந்தள் பகுதியில் சிறந்த அறிவுசார் மையம் மற்றும் நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, மத்திய மாநில அரசுகள், தேசிய வங்கிகள், ரயில்வே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட, அனைத்து போட்டி தேர்வுகளுக்கான, 10 ஆயிரம் புத்தகங்கள், மற்றும் 'ஸ்மார்ட் போர்டு' உடன் கூடிய வகுப்பறை வசதிகள் உள்ளன.
இந்த அறிவு சார் மையம், காலை, 9:00 மணி முதல், இரவு, 7:00 மணிவரை திறந்து வைக்கப்படுகிறது. இங்கு, அரசு போட்டி பல்வேறு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சிறந்த வல்லுனர்கள் கொண்டு திறக்கப்பட உள்ளது.
போட்டி தேர்வுகளில் பங்கேற்று, அரசு பணியில் சேர விரும்பும் மாணவர்கள், அறிவுசார் மையம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம்.மேலும், 0423-2444004 இன்று தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.