/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வைகாசி விசாக சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
வைகாசி விசாக சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகாசி விசாக சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
வைகாசி விசாக சிறப்பு பூஜை; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : மே 26, 2024 11:22 PM
கோத்தகிரி;கோத்தகிரி சக்திமலை அருள்மிகு வெற்றிவேல் முருகன் கோவிலில் நடந்த வைகாசி விசாக சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோத்தகிரி சக்தி மலை அருள்மிகு வெற்றிவேல் முருகன் கோவிலில், வைகாசி விசாக சிறப்பு பூஜை நடந்தது. அவிநாசி ஆதினம் தவத்திரு காமாட்சி தாசர் சுவாமிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
காலை, 8:00 மணிக்கு, டானிங்டன் ஸ்ரீ மகா சக்தி கணபதி கோவிலில் இருந்து, மேளதாளத்துடன், 108 தீர்த்த காவடி மற்றும் பால் காவடி ஊர்வலம் நடந்தது.
காலை, 11:00 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.
அர்ச்சகர்கள் ஈசான பட்டி விநாயகர் சிவம் மற்றும் வாமதேவ முருகேஷ் சிவம் ஆகியோர், பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து, பகல், 2:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில், சக்தி சிவ சங்க தலைவர் போஜராஜன், சேவா சங்க உறுப்பினர்கள் மற்றும் ஆன்மிக பெரியோர்கள் உட்பட, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

