/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் ரூ.407 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவ கட்டுமான பணிகள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்

ADDED : ஆக 10, 2024 03:18 AM

ஊட்டி:''நீலகிரி மாவட்டத்தில், 407 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது,'' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் சார்பில், பூர்வீக குடிமக்களின் சர்வதேச தின விழா கொண்டாடப்பட்டது.
மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், ஏழு பழங்குடியின மக்கள் தொன்மை மாறாமல் வாழ்ந்து வருகின்றனர். மாநிலத்தில், 2,000 மலை கிராமங்களில், பழகுடிகளுக்காக மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சாலை வசதி இல்லாத மலை கிராமங்களுக்கு நடந்து சென்று, மருத்துவ சேவை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பழங்குடி இன மக்களுக்கு ஏற்படும் 'சிக்கில் செல்' உள்ளிட்ட நோய்களுக்கு, 40 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பழங்குடியின பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில், நாட்டில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது. ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரியில், 700 படுக்கைகள் வசதி உள்ள நிலையில், பழங்குடியின மக்களுக்கு என, 50 படுக்கை வசதி கொண்ட தனிப்பிரிவு உருவாக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில், 407 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக, பழங்குடியினர் மக்களின் புகைப்பட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.