/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
/
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்கள்; போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
ADDED : ஆக 29, 2024 09:56 PM

குன்னுார் : குன்னுார் டி.டி.கே., சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னுார் டி.டி.கே., சாலை வழியாக, வெலிங்டன் ராணுவ மையம், சப்ளை டிப்போ, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், புனித ஜோசப் மேல்நிலை பள்ளி உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.
சாலையோரம் லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வளைவான பகுதிகளிலும், பல நாட்களாக தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களாலும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
காலை நேரங்களில் பள்ளிக்கு செல்வோர் இந்த இடங்களில், நெரிசலில் சிக்கி, குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். ராணுவ பகுதிக்கு செல்வோரும் பாதிக்கப்படுகின்றனர். இதேபோல, வாடகைக்கு இயங்கும் வேன்கள் பல மணி நேரம் சாலையோரத்தில் நிறுத்துவதாலும் பாதிப்பு தொடர்கிறது.
மக்கள் கூறுகையில், 'இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
மற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தினாலே உடனடியாக அபராதம் விதிக்கும் போலீசார், இப்பகுதியில் நிறுத்தும் வாகனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை வேண்டும்,' என்றனர்.