/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் சிரமம்

ADDED : ஜூன் 20, 2024 05:15 AM

கூடலுார், : கூடலுார் மார்த்தோமா நகர் பகுதியில், மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில், நிறுத்தப்படும் கனரக வாகனங்களால், போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
கூடலுார்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை, கர்நாடகா, கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். கர்நாடக மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் இவ்வழியாக, நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிக அளவில் வந்து செல்கின்றனர். அதேபோன்று, கர்நாடக மற்றும் வட மாநிலங்களில் இருந்து, கனரக வாகனங்கள் இவ்வழியாக கேரளாவுக்கு அதிகம் சென்று வருகின்றன.
அதில், மார்த்தோமா நகர் பகுதியில், சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகன போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. வாகன விபத்துகள் நடைபெறும் ஆபத்து உள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'இச்சாலையில் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.