/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தெப்பக்காடு புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவக்கம்: மக்கள் நிம்மதி
/
தெப்பக்காடு புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவக்கம்: மக்கள் நிம்மதி
தெப்பக்காடு புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவக்கம்: மக்கள் நிம்மதி
தெப்பக்காடு புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவக்கம்: மக்கள் நிம்மதி
ADDED : மார் 02, 2025 10:43 PM

கூடலுார்; முதுமலை, தெப்பக்காடு -மசினகுடி சாலையில், மாயார் ஆறு குறுக்கே கட்டப்பட்ட புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவங்கியதால் மசினகுடி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு -மசினகுடி சாலையில் மாயாறு ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலம் சேதமடைந்து வந்தது. அதனை இடித்து விட்டு, புதிய பாலம் கட்டும் பணி, 2022 ஜன., மாதம் துவங்கியது. வனத்துறைக்கு சொந்தமான சாலையை, தற்காலிக போக்குவரத்துக்கு பயன்படுத்தினர்.
முதல் கட்டமாக, பழைய பாலம் இடிக்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் புதிய பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஓராண்டுக்கு பின் புதிய பாலம் அமைக்கும் பணி மீண்டும் துவங்கப்பட்டது.
தொடர்ந்து, பருவமழை தீவிரமடைந்தது, மாயார் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதால் மீண்டும் பணி நிறுத்தப்பட்டது. மேலும், பருவ மழையின் போது தற்காலிக சாலையில் உள்ள பாலம், மாயார் ஆற்று வெள்ளத்தில் அடிக்கடி மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. உள்ளூர் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
பருவமழைக்கு, பின் பணிகள் துவங்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நடந்து வந்த பணி, கடந்த மாதம் நிறைவு பெற்றது. பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை சீரமைக்காததால் வாகன போக்குவரத்து துவங்க தாமதம் ஏற்பட்டது. அப்பணிகள் நிறைவு பெற்றது தொடர்ந்து, புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
மக்கள் கூறுகையில், 'ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த பாலம், இடித்து அகற்றப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி மூன்று ஆண்டுகளுக்கு முன், துவங்கப்பட்டது. மூன்று ஆண்களாக, நடந்து வந்த பணி நிறைவு பெற்று, வாகன போக்குவரத்து துவங்கியிருப்பது நிம்மதி அடைய செய்துள்ளது,' என்றனர்.